• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலையிலுள்ள குறைப்பாடுகளை தீர்க்க ஆட்சியாளர்களிடம் பணம் இல்லை - சஜித் குற்றச்சாட்டு

இலங்கை

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயற்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளிலுள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்யுள்ளார்.

அத்துடன், போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதாகவும், இந்தப் பணத்தில் டீல் அரசியலும் கூட முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப செயற்றிட்டத்தின் கீழ், 251ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) நடைபெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு 1 இலட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைதொடருந்து கருத்து தெரிவித் அவர்,

“பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்துவரும்போது நாடாளுமன்றத்திலும், வெளியிலும் என் மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர்.

நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட்டை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகளையே பகிர்ந்தளிக்கிறேன். இவை தவறான விடயங்கள் அல்ல.

ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை.

காலத்துக்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக காணப்படுகின்றது.

புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன.

மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக்கொடுக்கும் அரசியல் கலாசாரம் இந்நாட்டில் காலாகாலமாக இருந்து வருகிறது.

இந்நிலையை மாற்றியமைப்போம். பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் அரசியலும், டீல் அரசியலும் நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்ல நல்ல அரசியல் டீல்களை எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம். தமது சுய கௌரவத்துக்கு துரோகம் இழைத்து டீல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என நம்புகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply