• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு தியாகராசா பத்மகாந்தன்

பிறப்பு 07 SEP 1964 / இறப்பு 25 JUN 2024

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ நிரந்தர வதிவிடமகவும் கொண்ட தியாகராசா பத்மகாந்தன் அவர்கள் 25-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா(ஓய்வுநிலை அதிபர்- யாழ்/புங்குடுதீவு கனகாம்பிகை வித்தியாலயம்) தங்கம்மா (ஓய்வுநிலை அதிபர் - கிளி/இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் கனகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகௌரி(லதா- Swiss) அவர்களின் பாசமிகு கணவரும்,

மேனுஷா (Radiographer- Swiss) அவர்களின் அன்புத் தந்தையும்,

கலையரசி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்ற கலைச்செல்வி(கனடா), கலைவதனி(கனடா), பிறேமகாந்தன்(ஆசிரியர்- கிளி/முரசுமோட்டை அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற செல்வராசா(ஓய்வுநிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்-கிளிநொச்சி வலயம்), லோகநாதன்(கனடா), தர்மராசா(பொறியியலாளர்- கனடா), ஸஜனி(ஆசிரியர்-கிளி/மாசார் அ.த.க. பாடசாலை), ஜெயந்தி(நோர்வே), ஜெயபாலச்சந்திரன்(ஜெயம்-நோர்வே), ஜெயகுமாரி(ஜெயா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன்(நோர்வே), இந்துமதி(நோர்வே), நடனசிவம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 03:00மணியளவில் இல.441, ஆனந்தபுரம் கிழக்கு, கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேனுஷா - மகள்

    Mobile : +41794232295

கலையரசி - சகோதரி

    Mobile : +94776779295

Leave a Reply