• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மணப் பெண்ணின் திருவிளையாடல் வந்த எய்ட்ஸ்... மாப்பிள்ளைகளை தீவிரமாக தேடும் பொலிஸார்!

இந்தியா

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரின் தாய் உள்பட 7 பேரை பொலிஸார் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

கைதான பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர். 

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அண்மையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை மற்றும் பொலிஸார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர். 

இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.
 

Leave a Reply