• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியலமைப்பை ஜனாதிபதி மீற முயல்கிறார் – தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை அறிக்கை

இலங்கை

நாட்டின் வளர்ச்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கை தொடர்பான விபரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

குறித்த அறிக்கையில், சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் ஒரு நாட்டினை முன்னேற்ற முடியும். இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே கொள்கையின் மிக முக்கியமான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிப்புகளில் சில விடங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம்.  நாட்டு மக்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் சுயாதீனமாக செயற்படுத்துவதற்கு வழியமைப்பதே   எமது நோக்கமாகும் .

சட்டமா அதிபரின் சேவைக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் ஜனாதிபதியின் இந்த கோரிக்கை அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டது.  ஆனாலும் ஜனாதிபதி சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு பணிப்புரை வழங்கினார்.

ஒரு சில தேவைகளை கருதியே ஜனாதிபதி அவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளார். அரசியலமைப்பு பேரவையினால் நிராகரிக்கப்பட்டதை ஜனாதிபதி மீறி செயற்படுகின்றார். சட்டமா அதிபரின் பதவிக்காலம் நேற்றுமுன் தினத்துடன் நிறைவடைந்துள்ளது. அனைத்து விடயங்களையும் தமது அதிகாரத்தின் கீழ் செயற்படுத்தவே  அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

நாட்டு மக்களின் உரிமைகளையும் , அதிகாரங்களையும் சுயாதீனமாக சுதந்திரமாக செயற்படுத்துவதற்கு வழியமைப்பதே எமது நோக்கமாகும்.

நாட்டின் தொழிற்சங்கத்தினர் கல்வியியலாளர்கள்; பல்துறைசார்ந்தவர்கள் என அனைவரினதும் உரிமைகளுக்கு எமது ஆட்சியில் மதிப்பளிக்கப்படும். அதற்கான சூழல் தேசியமக்கள் சக்தியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும் என அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
 

Leave a Reply