• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் உணவு பணவீக்கம் அதிகரிப்பு - மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடா

கனடாவில் (Canada) உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மளிகை பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரையில் உணவு பொருட்களின் விலைகள் 22.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, மக்களின் செலவுகளில் பிரதானமாக உணவுப் பொருள் விலை அதிகரிப்பு காணப்படுகின்றது.

இந்த நிலையில், மரக்கறி வகைகள், இறைச்சி, பழ வகைகள், மதுபானம் அல்லாத பானங்கள் என்பவற்றின் விலைகள் அதிகளவு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடு்த்து, உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவு குறைக்கப்படுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கனடாவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply