• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த டுவிங்கிள் கண்ணா-பாபி தியோல்

சினிமா

இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் டுவிங்கிள் கண்ணா. கடந்த 1995-ம் ஆண்டு பர்சாத் என்ற படத்தின் மூலம் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக பாபி தியோல் நடித்திருந்தார். படத்தில் இருவரின் காதல் காட்சிகள் மிகவும் வரவேற்பை பெற்றது.

இதுபோன்று படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் மூலம் இந்தி திரை உலகில் டுவிங்கிள் கண்ணா பிரபலமாகி ஏராளமான படங்களில் நடித்தார்.

ஷாருக்கான் சல்மான் கான் அக்சய் குமார் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த டுவிங்கிள் கண்ணா, நடிகர் ராஜேஷ் கண்ணா-டிம்பிள் கபாடியா ஆகியோரின் மகள் ஆவார்.

சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்த டுவிங்கிள் கண்ணா 2001-ம் ஆண்டு அக்சய் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தனது முதல் கதாநாயகனான பாபி தியோலை டுவிங்கிள் கண்ணா சந்தித்துள்ளார்.

தற்போது இருவரும் சந்தித்த புகைப்படங்களையும் பர்ஷாத் படத்தில் நடித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் 29 ஆண்டுகளுக்கு பிறகு பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி. அவர் இப்போதும் படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பாபி தியோல் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சர்வதேச அளவில் வெளியான இந்த படம் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply