• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி

இலங்கை

கொழும்பு அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபா மோசடி தொடர்பில் பிரதான காசாளர் உட்பட 22 காசாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த பாரிய பண மோசடி, மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்சார கம்பிகளை அறுத்து மிகவும் தந்திரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துரிகிரிய நெடுஞ்சாலையில் 27 ஊழியர்கள் பணிபுரிவதுடன், அதில் 22 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அத்துரிகிரிய நெடுஞ்சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு கமராக்கள் செயலிழந்த நிலையில் வெளியேற வந்த வாடிக்கையாளர்களிடம் பயணச்சீட்டு வழங்காமல் பணம் வசூலித்து பாரியளவிலான பண மோசடி சிறிது காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் 2024 ஜனவரி மாத இறுதியில், சில நாட்களில் பாதுகாப்பு கேமராக்களை செயலிழக்கச் செய்து கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளமை தெரியவந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply