• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது! -ஜனாதிபதி

இலங்கை

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது என்றும்,  அந்தப் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க  வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வசே மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற  ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’ வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது எந்த நாடுகளினாலும் செய்ய முடியாது. அதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகள் கடனில் உள்ளன.

கடன் நிவாரணங்களையும் கோரியுள்ளன. ஆசியாவின் கடன் நிவாரண கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை.
இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க முடியும் என நான் சுட்டிக்காட்டினேன். ஆனால், ஆப்பிரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கடன் நிவாரணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தற்போது முதல் படியை எடுத்துள்ளது. அதன்படி, நாங்கள் திவால் நிலையில் இருந்து வருகிறோம். இப்போது பொருளாதார மாற்றச் சட்டத்தை ஏற்று அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் அந்த வேலையைச் செய்வது கடினம்.
எனவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் கடன்களை முழுமையாக இரத்து செய்ய இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் முன்மொழிந்தது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது உலகளாவிய தெற்கில் குரல் எழுப்புவதாகும்.
இந்தப் போரை நிறுத்தி ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாட்களில் கென்யாவில் நடந்த கலவரங்களைப் பார்த்தோம். தற்போது சுமார் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரம் தயாராகவில்லை என்றால் இந்த நிலைதான் உருவாகும்.
இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை இலங்கையில் உருவாக்காவிடின் நாமும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, இந்தப் பணத்தை அந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கிறது.
அத்தகைய உதவியை இலங்கை எதிர்பார்க்கவில்லை. கடனை நிர்வகிப்பதன் மூலம் இலங்கை முன்னேறி வருகிறது. அதற்குத் தேவையான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது. அந்தப் பாதையில் நாம் தொடர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply