• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண் தாதாவாக அவதாரம் எடுக்கும் நடிகை சன்னி லியோன் - கொட்டேஷன் கேங் டிரைலர்

சினிமா

விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொட்டேஷன் கேங்க். பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், ஜாக்கிசெராப், ஜெயபிரகாஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற ஜூலை மாதம்திரைக்கு வர இருக்கிறது. காஷ்மீர், மும்பை, சென்னையில் நடைபெறும் கதை இந்த படம்.

கொலைச் சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வதே கொட்டேஷன் கேங் படத்தின் கதை.

படத்தில் பெண் தாதாக்களாக பிரியாமணி, சகுந்தலா என்ற கதாபாத்திரத்திலும் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் பயங்கர கேங்ஸ்டராக பத்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

படத்தில் இருவரது கதாபாத்திரங்களும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளன.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் சன்னி லியோன் பேசியதாவது:-

இந்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குனர் விவேக் கண்ணன் நினைத்து என்னை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

பிரியாமணியும் நானும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறோம்.

கவர்ச்சியாக என்னை பார்த்த ரசிகர்கள் இதுபோன்று கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும் என்னை பார்த்து ரசிப்பார்கள். ஜாக்கி செராப்புக்கு நான் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் கண்டிப்பாக மாறும். அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

படத்தின் டிரைலர் மிகவும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் நிரம்பியுள்ளது. காஷ்மீர், மும்பை மற்றும் சென்னையென பல இடங்களில் ஒளிப்பதிவாளரான அருண் பத்மனாபன் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைக்க கேஜே வெங்கடராமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைப்படம் வெளியாகவுள்ளது.
 

Leave a Reply