• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓடிடி-யில் வெளியான சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு திரைப்படம்

சினிமா

சின்னத்திரையில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் 2004- ம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் நடிகர் சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து 'சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக கலக்கினார்.

அதைத்தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஒரு முழு நேர கதாநாயகனாக மாறினார். அதற்கடுத்த பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "இங்க நான் தான் கிங்கு." ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் சந்தானத்துடன் பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "இங்க நான் தான் கிங்கு" படத்தை கோபிரம் பிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply