• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்புப்  போராட்டம்

இலங்கை

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால்  இன்று காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்புப்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ”அரசாங்கம் சர்வதேச நாடுகளை ஏமாற்றியதைப் போன்று, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுகின்ற தாய்மாரின் கண்ணீரையும், அவர்களின் துயரங்களையும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply