• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய இடைத் தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி

கனடா

டொரன்டோவின் சென் போல்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டியுள்ளது.

லிபரல் கட்சியின் வலுவான தொகுதியாக கருதப்பட்டு வந்த இந்த தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட டொன் ஸ்டுவர்ட் இந்த தேர்தலில் வெற்றி ஈட்டியுள்ளார்.

டொரன்டோவின் சென்ட் பால்ஸ் தொகுதியில் இவ்வாறு ஸ்டுவர்ட் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் கான்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் ஸ்டுவர்ட் 590 மேலதிக வாக்குகளின் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நீண்ட காலமாக இந்த தொகுதி லிபரல் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

லிபரல் கட்சியின் சார்பில் லெஸ்லி சர்ச் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் லிபரல் கட்சி முன்னிலை வகித்த போதிலும் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தேர்தல் வெற்றி ஆளும் லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் தொகுதியின் தேர்தல் வெற்றியானது ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என அண்மையில் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். 
 

Leave a Reply