• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்தடுத்து ஓடிடி-யில் வெளியாகும் மலையாள ஸ்டார்களின் படங்கள்

சினிமா

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர், கன்னூர் ஸ்குவாட், நண்பகல் நேரத்து மயக்கம் , பிரம்மயுகம் என அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதைத்தொடர்ந்து மம்மூட்டி டர்போ என்ற படத்தில் நடித்தார். கடந்த மாதம் 23 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.

மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் அமைந்தது.

இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி தளமான சோனி லைவ் வாங்கியுள்ளது. இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் மலையாளத்தில் பிரித்விராஜ் , பேசில் ஜோசஃப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான குருவாயூரம்பல நடையில் திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

நிவின் பாலி நடித்து வெளியான மலையாளி ஃப்ரம் இந்தியா திரைப்படமும் ஜுலை 5 ஆம் தேதி சோனி லைவில் வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து பிரபல நட்சத்திரங்கள் நடித்த மலையாள திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகப்போவதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

Leave a Reply