• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடல் தேவைகளுக்கான AI பொம்மைகளை உருவாக்கிவரும் சீன விஞ்ஞானிகள்

செயற்கை நுண்ணறிவை (AI) உடல் தேவைகளை பூர்த்தி செய்யும் உறவுகொள்ளும் ரோபோக்களாக மாற்ற சீன விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

அவை பேசக்கூடியவைகளாகவும், உடல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவைகளாகவும் உருவாக்கப்படுகின்றன.

Shenzhen-ஐ தளமாகக் கொண்ட பாலின பொம்மை தயாரிப்பு நிறுவனமான Starpery Technology, இந்த புதிய தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டு வரவுள்ளன.

இந்த AI ரோபோ பொம்மைகள் ஆண் மற்றும் பெண் வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த புதிய AI-அடிப்படையிலான ரோபோ பொம்மைகள் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், பயனர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டார்பெரி டெக்னாலஜியின் தலைமை நிர்வாக அதிகாரி Evan Lee கூறியுள்ளார்.

Leave a Reply