• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான நிலையத்தில் PG work permit விண்ணப்பத்தை நிறுத்திய கனடா

கனடா

Flagpoling-ஐ தவிர்ப்பதற்காக விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு PG work permit விண்ணப்பம் வசங்குவதை கனடா நிறுத்தியுள்ளது.

இந்த மாற்றங்கள் ஜூன் 21 முதல் அமலுக்கு வந்தன.

வேலை மற்றும் நிரந்தர வதிவிடத்தை நாடும் சர்வதேச மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி பணிக்கான அனுமதி (PGWP) முக்கியமானது.

கனடாவில் 2023-ஆம் ஆண்டில் PGWP விண்ணப்பங்கள் 214 சதவீதம் உயர்ந்துள்ளன. இது வெளிநாட்டவர்களின் வேலை மற்றும் வதிவிடத்திற்கான அதிக தேவையை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர், வெளிநாட்டினர் இனி எல்லையில் (விமான நிலையம்) post graduate work permit-க்கு (PGWP) விண்ணப்பிக்க முடியாது என அறிவித்துள்ளார்.

Flagpoling-ஐ குறிவைத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

Flagpoling என்பது, ஏற்கனவே கனடாவில் இருக்கும் ஒரு வெளிநாட்டவர் கனடாவை விட்டு சொந்த நாட்டிற்கு வெளியேறாமலே, கனேடிய விமான நிலையங்களில் எளிதாக PGWP-க்கு விண்ணப்பித்து, புதுப்பிக்கப்பட்ட படிப்பு அல்லது பணி அனுமதி போன்ற புதிய தற்காலிக வதிவிட நிலையைப் பெறுவதைக் குறிக்கிறது.

கனடாவில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள், வேலை அல்லது படிப்பு அனுமதிக்கான சாதாரண காத்திருப்பு நேரத்தைத் தவிர்க்க இந்த Flagpoling-ஐ பயன்படுத்துகின்றனர்.

Flagpoling என்பது சட்டப்பூர்வ நடைமுறையாகும், ஆனால் அதிகாரிகள் குடியேற்றப் பணியில் ஈடுபடுவதால், எல்லையில் குறிப்பிடத்தக்க ஆதாரங்களை எடுத்துக்கொள்வது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கனடாவின் இந்த நடவடிக்கையானது பயணிகளுக்கான தாமதத்தை குறைக்கும் மற்றும் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வணிகப் பொருட்களின் இயக்கத்தை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா அறிவித்துள்ளது. 

Leave a Reply