• Welcome to TamilsGuide
செய்திகள் 1

 என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை... தலையில் காயங்களுடன் தப்பிய பிரித்தானிய இளவரசி 

குதிரை மிதித்ததில் தலையில் காயங்களுடன் தப்பியுள்ள பிரித்தானிய இளவரசி ஆன், தமக்கு என்ன நடந்தது என்பது குறித்து நினைவுப்படுத்த தவறியதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய இளவரசி ஆன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். 73 வயதான இளவரசி ஆன் ஞாயிற்றுக்கிழமை இரவு Gloucestershire இல் உள்ள காட்கோம்பே பார்க் எஸ்டேடில் நடந்த ஒரு சம்பவத்தில் காயமடைந்தார்.

தற்போது அவர் பிரிஸ்டலில் உள்ள சவுத்மீட் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்றே பக்கிங்ஹாம் அரண்மனை வெளிப்படுத்தியுள்ளது. இளவரசிக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,

ஆனால் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசி ஆன், தமக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பதை நினைவுப்படுத்த முடியாமல் உள்ளார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

குதிரைகள் மீது மிகுந்த அன்பு கொண்ட இளவரசி ஆன், 1976ல் கனடாவின் மாண்ட்ரீலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் அரச குடும்பத்து உறுப்பினராவார்.

மட்டுமின்றி, அவர் 28 வெவ்வேறு குதிரைகள் மற்றும் விலங்குகள் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு அரச குடும்பத்து புரவலராகவும் உள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

நேற்று மாலை காட்கோம்பே பார்க் தோட்டத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இளவரசி ஆன் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், உரிய நிபுணர்களின் கண்காணிப்பில் இளவரசி ஆன் உள்ளார் என்றும், மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, இளவரசியின் காயம் என்பது குதிரையின் தலையால் அல்லது காலால் ஏற்பட்டிருக்கலாம் என்றே முதலுதவி அளித்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, ஞாயிறு இரவு 9.15 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் தரையிறங்குவதைப் பார்த்ததாகவும், இரவு 9.23 மணி முதல் பொலிஸ் ஹெலிகொப்டர் வட்டமிட்டதாகவும் உள்ளூர் நபர் ஒருவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது மகள் ஜாரா டிண்டால் மற்றும் மகன் பீற்றர் பிலிப்ஸ் ஆகியோர் அந்த நேரத்தில் தோட்டத்தில் இருந்தனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
 

Leave a Reply