• Welcome to TamilsGuide
செய்திகள் 1

LOVE U விஜய் அண்ணா - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு

சினிமா

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை இன்று அவரது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " தளபதி விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு ஒரு சர்ப்ரைஸ் வேணாமா..! நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம்..ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷாட்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பட நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை வேகமாக நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "LOVE U விஜய் அண்ணா. மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துகள். அன்பு, சிரிப்பு, சந்தோஷம், நம்பிக்கை, நினைவுகள் என அனைத்துக்கும் நன்றி. கடந்த ஓராண்டிற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply