• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் கைகோர்த்த இலங்கை

இலங்கை

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே  ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் நிகழ்வுகள் பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன.

மறுசீரமைப்பின் ஊடாக இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சலுகை அடிப்படையிலான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply