• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ரொக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ்

ஜூன் 5ம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு புறப்பட்டு, ஜூன் 06ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

சுனிதா வில்லியம்ஸ் 

விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22ம் திகதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும் ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றை சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால் இருவரும் மேலும் 30 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னும் விண்கலம் பூமிக்கு திரும்ப 27 நாட்களுக்கு தேவையான எரிபொருள் தான் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா(Nasa) கோரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply