• Welcome to TamilsGuide
செய்திகள் 1

E-visa திட்டத்தை நிறுத்திய பிரபல ஆசிய நாடு: திண்டாட்டத்தில் சுற்றுலா விரும்பிகள்

பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜப்பான், தங்களின் e-visa திட்டத்தை நிறுத்தி, சுற்றுலா விரும்பிகளை திண்டாட வைத்துள்ளது.

ஜப்பான் நிர்வாகம் தங்கள் நாட்டில் சுற்றுலாவை வளர்க்கும் நோக்கில் 2023ல் e-visa திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் பல்வேறு நாட்டவர்கள் ஜப்பான் நோக்கி பயணப்பட்டனர்.

ஆனால் தற்போது e-visa விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதுடன், அந்த திட்டத்தை ஜப்பான் நிர்வாகம் நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏப்ரல் 27 முதல் இணையமூடாக விண்ணப்பிக்கும் முறையும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வார நாட்களில் பகல் 8 முதல் 10 மணிக்குள் மின் அஞ்சலூடாக விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அன்று மாலை 4 மணிக்கு ஜப்பான் தூதரகத்தில் இருந்து பதில் அனுப்பப்படுகிறது.

இப்படியான பதில் வரவில்லை என்றால், அடுத்த நாள் மீண்டும் விரிவான தகவலுடன் மீண்டும் மின் அஞ்சல் அனுப்ப வேண்டும். மேலும், ஜப்பான் பயணம் தொடர்பில் விண்ணப்பிக்கும் நபர்கள் 3 மாதங்களுக்கு அதிகமாகவும் 2 வாரத்திற்கு குறைவாகவும் குறிப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒரே காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பல பயண முகவர்கள் பலமுறை முயன்றும், ஜப்பான் தூதரகம் அவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ள நிலையிலேயே அதன் காரணம் தொடர்பில் தகவல் கசிந்துள்ளது.

இதனிடையே, ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை கழிக்க ஜப்பான் செல்லும் திட்டத்துடன் இருப்பவர்கள், முதலில் சில நாட்கள் மணிலா சென்று தங்கிவிட்டு, அங்குள்ள ஜப்பான் தூதரகத்தில் நேரிடையாக சென்று விசாவுக்கு விண்ணப்பிகலாம் எனவும்,

7 முதல் 10 வேலை நாட்களில் விசா அனுமதிப்பதாகவும் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் ரகசியம் உடைத்துள்ளார். இன்னொருவர், 5 ஆண்டுகளுக்கான பல முறை பயணப்படும் ஜப்பான் விசாவுக்கு விண்ணப்பிக்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply