• Welcome to TamilsGuide
செய்திகள் 1

57 ஆவது நாளாகத் தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டமானது  இன்று 57 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களினால்  கவனயீர்ப்புப் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள்பீட கட்டிட தொகுதியிலிருந்து ஆரம்பித்த குறித்த பேரணியானது  நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை சென்றடைந்து நிறைவடைந்திருந்தது.

இதன்போது கொழும்பில் நேற்றைய தினம் பாடசாலை ஆசிரியர், அதிபர்கள் நடத்திய போராட்டத்தில் நீர் தாரைப்  பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, தமது சம்பள உயர்வை உடனடியாக தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
 

Leave a Reply