• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு டயரே 1000 கிலோ... புஜ்ஜி வாகனத்தின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்

சினிமா

சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.

2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.

இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.
 

Leave a Reply