• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்பு

இலங்கை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் திருடப்பட்ட  ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை திருடப்பட்தையடுத்து நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸில்  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுக்கமைய ,கிளிநொச்சி பொலிஸார் திருடப்பட்ட  நகையுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்து நகையையும் மீட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் பல தரப்பட்ட குற்றமிழைத்தவர்கள் என தெரியவந்துள்ளது .

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply