• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விலை மனுக்கோரல் மூலம் - 78 கோடி ரூபா நட்டம்

இலங்கை

கடந்த மூன்று மாதங்களில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல் விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சாம்பல், தொன் ஒன்று 13,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், தொன் ஒன்றுக்கு 2,900 ரூபாவுக்கு விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது.

இதனால், தொன் ஒன்றுக்கு 10,400 ரூபாய் நஷ்டத்தில் இந்த ஆண்டு மே 15 ஆம் திகதி அவசர விலை மனுக்கோரல் அழைப்பின் மூலம் பெரிய அளவில் சீமெந்து வியாபாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு இந்த விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது.

இதன்படி 36 மாதங்களில் அரசாங்கத்திற்கு 6.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply