திரு செல்லையா ஜெயபாலசிங்கம்
பிறப்பு 09 NOV 1951 / இறப்பு 29 DEC 2024
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மணல்தறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ”சிவனருட்சீலர்", "ஆன்மீகப்பேரொளி” செல்லையா ஜெயபாலசிங்கம் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா சீரடியில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நாகமணி, சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி (அதிபர் - Evershine Kids World) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா(விரிவுரையாளர் - தேசிய கல்வியியற் கல்லூரி), மதுரிகா(பணிப்பாளர் - Evershine Kids World), திறோஜன்(புவித்தொழில்நுட்பவியல் பொறியியலாளர் - கனடா), ஜனுசன்(கட்டமைப்புப் பொறியியலாளர், Structural Engineers, Design Consultants) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசிகன்(ஆசிரியர்), சுஜீவன்(சிரேஷ்ட மின்பொறியியலாளர் - இலங்கை விமானப்படை), சுதர்ஷிகா(மென்பொறியியலாளர் - கனடா), சிவநங்கை(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்வினா, அக்ஷரன், அடெலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் செல்வராணி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் சண்முகாநந்தம்(கனடா), வசந்தகுமாரி, வசந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கணநாதன் மற்றும் தயாநிதி(கனடா), உதயகுமார், கிருபா(பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.30 மணியளவில் இல.61, மணல்தறை வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பி.ப 01.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94212223726
Leave a Reply