• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிஸ் புலம்பெயர்தல் எதிர்ப்பு வாக்கெடுப்பு - வெளிநாட்டவர்களுக்கு உருவாகியுள்ள அச்சம்

சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு குறித்து சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது. 

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், இம்மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது. 

வெளிநாட்டவர்களுக்கு உருவாகியுள்ள அச்சம்

இந்நிலையில், அந்த வாக்கெடுப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் உட்பட பலரிடம் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 51.28 சதவிகிதத்தினர், புலம்பெயர்தலுக்கு எதிரான அந்த வாக்கெடுப்பு தங்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். 

அவர்களில் சிலர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிட்சர்லாந்தின் உறவும், தடையில்லா போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

சிலர், வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாரபட்சம் மோசமாகலாம் என்றும், தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சிலர், புலம்பெயர்வோர் இல்லாததால் மக்கள்தொகை குறைந்துவிடும் என்றும், வயதான காலத்தில் தங்களை கவனித்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என்னும் கவலையும், நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்படுவோர் குறித்த கவலையும், சுவிட்சர்லாந்தின் நற்பெயர் கெட்டுப்போகுமே என்ற கவலையும் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
 

Leave a Reply