வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும் இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெறப்படும் என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கூன் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் (04) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட சிறப்புப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்நிலை காணொளித் தொழில்நுட்பம் மூலமாகவும் குழுவில் இணைந்த நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்இ நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சிஇ இதுவரை பெய்த ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் ஒரே இடங்களாகவே உள்ளன என்றும்இ இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகள் குறித்த அறிக்கை தயாரிப்பது அவசியம் என்றும் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்இ வானிலை முன்னறிவிப்பின்படி வரும் நாட்களில் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் பேரிடர் சூழ்நிலையை நிர்வகித்தல் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் நடைபெற்று தீர்வுகள் வழங்கப்பட்டன.
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைச் செல்வி மற்றும் அனுஷ்கா திலகரத்ன, மேயர்கள், பிரதேச சபை தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் இணைய வழியிலும் காணொளித் தொழில்நுட்பம் வழியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வனிகசேகர, கூடுதல் மாவட்ட செயலாளர்கள் தினிகா கவிசேகர மற்றும் ஷாலிகா லிடகும்புர, நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





















