சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்
சவுதி அரேபியாவின் முன்னணி அரச எண்ணெய் நிறுவனமான 'சவுதி அரம்கோ' நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின் ஹூதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்திலிருந்து பெரும் தீப்பிழம்புகளும் அடர்ந்த புகையும் வானத்தை நோக்கி எழும்புவதைக் காண முடிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமனின் சனா தலைநகர் உட்படப் பல பகுதிகள் மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.





















