• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் நேரடி மேற்பார்வையின் கீழ் புதிய ஏவுகணைப் பரிசோதனையொன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதுடன், அது 1,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிழக்குக் கடற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிராந்தியத்தில் சர்வதேச பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
 

Leave a Reply