அமெரிக்காவில் அணுமின் புரட்சி - ட்ரம்பின் இலக்கை எட்ட புதிய நடவடிக்கை
அமெரிக்காவில் அணுசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ‘Vistra Corp’ நிறுவனத்திற்கு 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கிட அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் கிறிஸ் ரைட் (Chris Wright) எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்கள், மின்சாரப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கங்கள் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்காவில் மின்சாரத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலுக்குத் தீர்வாகவும், 2050 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்காவின் அணுசக்தித் திறனை நான்கு மடங்காக உயர்த்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இலக்கை எட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனுதவியைப் பயன்படுத்தி Vistra நிறுவனம் தனது அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















