• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாள பிரதமருடன் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

இலங்கை

நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (02) அந் நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை (KP Sharma Oli) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நேபாள-இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பயணமாக டிசம்பர் 28 ஆம் திகதி நேபாளம் சென்றடைந்த ரயில் விண்ரமசிங்க, இன்று நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply