• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்தாண்டில் நாய் கடிக்கு இலக்கான 6,700 பேர்

இலங்கை

2024 ஆம் ஆண்டு பதுளையில் சுமார் 6,700 பேர் நாய் கடித்து இலக்காகி பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலை பதிவுகள் தெரிவிக்கின்றன.

நாய் கடிக்கு இலக்கானவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாய் கடிக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுகின்ற தடுப்பூசி போடாத நாய்கள் மற்றும் பூனைகள் கடிப்பதன் காரணமாகவே இவ்வாறான நிலைமை உருவாகியுள்ளது. மொத்தமாக ஊவா மாகாணத்தில் சுமார் 25,000 முதல் 30,000 நோயாளிகள் தடுப்பூசிகளைப் பெற வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி எல்ல பிரதேசத்தில் பாம்பு கடி மற்றும் நாய் கடிக்கு இலக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், பதுளை புறநகர்ப் பகுதிகளில் தெருநாய்கள் அப்பகுதி மக்களுக்கு மேலும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன
 

Leave a Reply