• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கழிப்பறை காகிதத்தைவிட மோசமாக நடத்தும் அமெரிக்கா

அமெரிக்காவுடனான பாகிஸ்தானின் கடந்த கால உறவை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய ஆசிப், அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் டாய்லட் டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக சாடினார்.

முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்று விமர்சித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்று கவாஜா ஆசிப் வலியுறுத்தினார்.  
 

Leave a Reply