ஐவரை இலக்கு வைத்து துப்பாக்ச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
வெலிகம – தப்பரதோட்ட – வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற ஐவர் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வலான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் கப்பரதொட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் உயிரிழந்த கைதியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பிய தரப்பினர் மீதே இன்று அதிகாலை இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிர்த்தப்பியதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.