• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

இலங்கை

உயிரிழந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி இட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஜிம்மி கார்ட்டர் தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.

அதற்காக அவருக்கு 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்றும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
 

Leave a Reply