• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்

இலங்கை

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியந்த பெரேரா அவர் தனது சேவை நீடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இலங்கை இராணுவத்தின் 25 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவை நீடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று ஓய்வு பெற்ற நிலையில் லசந்த ரொட்ரிகோவின் நியமனம் வந்துள்ளது.
 

Leave a Reply