என் மகன் இறந்துட்டான்.. துயர செய்தி பகிர்ந்த திரிஷா
சினிமா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர இவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளங்களில் துயர் செய்தி பகிர்ந்துள்ளார். அதில், "என் மகன் சோரோ இன்று கிறிஸ்துமஸ் காலை உயிரிழந்து விட்டான். என்னை நெருக்கமாக அறிந்தவர்களுக்கு இனி என் வாழ்க்கை ஒருதுளி அர்த்தமும் இல்லாத ஒன்று என்பது நன்கு தெரியும்."