• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிக்கடுவையில் நீரில் மூழ்கிய 5 சுற்றுலா பயணிகள் மீட்பு

இலங்கை

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் ஹிக்கடுவையில் இடம்பெற்ற வெவ்வேறு நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹிக்கடுவை கடற்பரப்பில் மூழ்கிய நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

அப்போது கடமையில் இருந்த காவல் துறையின் உயிர்காக்கும் அதிகாரிகளால் சுற்றுலாப் பயணிகள் நால்வரும் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 33 மற்றும் 48 வயதுடைய ரஷ்யர்கள்.

இதேவேளை, ஹிக்கடுவ, தோடன்டுவ பிரதேச கடற்பரப்பில் நேற்று மாலை இந்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரும் அவரது மகளும் கடலில் நீராடிய போது அடித்துச் செல்லப்பட்டதாகவும், இதன் போது பிரதேசவாசிகள் அவர்களை மீட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 57 வயதான இந்திய நபர் உயிரிழந்துள்ளார்.
 

Leave a Reply