• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த வருடத்திற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - பிரதி அமைச்சர்

இலங்கை

ஆசிரியர்கள் உட்பட அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த வருடத்திற்குள் உறுதியான சம்பள உயர்வு வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சம்பள அதிகரிப்பு தொடர்பான முழு விபரங்களும் உள்ளடக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  “அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு நாங்கள் வேலை செய்கிறோம், அரசியல் லாபத்திற்காக அல்ல, ஆனால் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்கள் கணிசமான இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதுள்ள சம்பளம் போதுமானதாக இல்லை,” என்று அவர் விளக்கமளித்தார்.

அத்துடன் சம்பள அதிகரிப்பு அவசரத் தேவை எனவும் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“நாம் அனைவரும் அறிந்தது போல், முன்னைய  அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒரு பொறுப்பான நிர்வாகம் என்ற வகையில், 2026 வரை மக்களைக் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது. நாங்கள் அத்தகைய அணுகுமுறையை எடுக்கவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“எனவே, அடுத்த ஆண்டுக்குள் உறுதியான சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும்” என்று பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவித்தார் .
 

Leave a Reply