• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரியோ டி ஜெனிரோவில் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உரையாடினார்.

"ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சி மாநாட்டில் ஜோ பைடனுடன். அவரைச் சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி" என்று மோடி எக்ஸ் பதிவில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில், மோடியும் பைடனும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினர்.

பிரேசில் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடி மற்றும் பைடென் இடையேயான இருதரப்பு சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. அடுத்த மாதம் பைடென் அமெரிக்க ஜனாதிபதி பதவியை குடியரசுக் கட்சித் தலைவர் டொனால்ட் டிரம்பிடம் ஒப்படைப்பதற்கு முன், இந்த சந்திப்பு அவர்களின் கடைசி உரையாடலாக இருக்கலாம்.

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸிடம் 78 வயதான டிரம்ப் அமோக பெற்றார். டிரம்பின் பதவியேற்பு விழா ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளது.

நைஜீரியாவிற்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி தனது பிரேசில் பயணத்தை தொடங்கிய மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி20 உச்சிமாநாட்டில் வறுமை, பசி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது போன்ற உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஜி20 தலைவர்கள் ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் காசாவின் நிலைமை குறித்தும் ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply