அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு
இலங்கை
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
800,000 பெறுனர்களுக்கான பொதுப் பிரிவின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் 8,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் வறிய நிலையில் உள்ள 400,000 பெறுநர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு 15,000 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (03) நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.
அதேநேரம், அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
டிசம்பர் 31, 2024 இல் முடிவடையவிருந்த 400,000 பெறுநர்களுக்கான கொடுப்பனவு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024 டிசம்பர் 31 இல் முடிவடையவிருந்த மற்றுமோர் பெறுநர்களுக்கான கொடுப்பனவு 2025 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் கூறினார்.