• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்!- கடல்தொழில் பிரதி அமைச்சர் உறுதி

இலங்கை

நாட்டிலுள்ள மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகே உறுதியளித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த
கடல்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலின் போதே மீனவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

இதன்போது விநாயகபுரம் மீனவர்களினால் மகஜர் ஒன்றும் கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply