அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்
இலங்கை
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இவரின் வருகை பிராந்திய செழிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு தெற்காசியாவின் முக்கிய பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல் மற்றும் மக்கள் உறவுகளை வலுப்படுத்துதல் போன்றவற்றில் அமெரிக்கா-இலங்கை கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக உதவிச் டொனால்ட் லூ எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.