புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது
இலங்கை
” புதிய அரசாங்கம் என்ற ரீதியில் புதிய அரசியல் அமைப்பை நோக்கி நாம் செல்ல வேண்டிய தேவையுள்ளது”என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” கடந்த 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் பிரகாரம் முன்வைக்கப்பட்டது 13 வது அரசியல் சீர்திருத்த சட்டமாகும். நாங்கள் ஒரு புதிய அரசாங்கம் என்ற ரீதியில் புதிய அரசியல் அமைப்பை நோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது.
நாங்கள் ஒரு அரசியல் கட்சி என்ற ரீதியில் கடந்த தேர்தல்களில் வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள எந்த ஒரு விடயத்தையும் நாங்கள் மாகாண சபை முறைமையை நீக்குவதற்காக எந்த ஒரு மக்கள் ஆணையையும் பெறவில்லை. இதனை தெளிவாக சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மாகாண சபை அளகு போதியதல்ல நிச்சயமாக இதனையும் தாண்டிய ஒரு தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டியுள்ளது. நாம் ஒரு புதிய அரசியல் சீர்திருத்தத்தை முன் வைக்கும் போது சகல அளகுகளும் மாற்றப்பட்டு புதிய அரசியல் அமைப்பு இங்கு முன்வைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியானது மாகாண சபை முறை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணையை பெறவில்லை, நீக்குவதற்கான எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மாகாண சபை முறைமை விட ஒரு திறமையான அளகை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.
இதில் சகல மக்களுக்கும் சம உரிமையை வலுறுத்திய ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் அமைப்பு எமக்குத் தேவை. எமக்கு கிடைக்கப்பெற்ற மக்களானையை நாம் நிச்சயம் மீறி செயல்பட மாட்டோம்” இவ்வாறு அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.