இசை நிகழ்ச்சி டிக்கெட் மோசடி குறித்து எச்சரிக்கை
சினிமா
கனடாவில் இசை நிகழ்ச்சி மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல இசை கலைஞரான டெய்லர் சிப்ட்டின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கனடாவின் சில இடங்களில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சிகளில் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி பலர் மக்களை ஏமாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் டொரன்டோவை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.
தனது 7 வயதான மகளுக்கு பிறந்தநாள் பரிசாக இந்த டிக்கெட்டுகளை வழங்குவதற்கு குறித்த பெண் திட்டமிட்டு இருந்தார்.
சமூக ஊடகத்தில் டிக்கெட் கொள்வனவிற்காக 1800 டாலர்களை குறித்த பெண் செலவிட்ட போதிலும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.
இந்த இசை நிகழ்ச்சி பிரபலமானது என்ற காரணத்தினால் பலரும் டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்களின் இந்த இசை ஆர்வத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகாரர்கள் பணம் பறிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணுக்கும் அவரது மகளுக்கும் டிக்கெட்டுகள் கிடைக்க பெற்றுள்ளன.
குறித்த பெண் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் கேள்விப்பட்ட இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் இந்த டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.