4 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்..
சினிமா
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் கடந்த வாரம் வெளிவந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.
பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், வெளிவந்த முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் படத்தின் மீது வைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகை ஜோதிகா கூட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில், கங்குவா படத்தின் மீது திட்டமிட்டு இவ்வவாறு எதிர்மறையான விமர்சங்களை வைக்கப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
விமர்சன ரீதியாக சரிவை சந்தித்துள்ள கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க. கங்குவா படம் வெளிவந்து 4 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகளவில் 4 நாட்களில் இப்படம் ரூ. 90 கோடி வரை வசூல் செய்துள்ளது.