• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை சமந்தா.. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்..

சினிமா

தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது இந்தியளவில் பிரபலமாகிவிட்டார் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்தாக சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவரவுள்ளது.

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார். ஆனால், அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ள அவர் தொடர்ந்து படங்களை கமிட் செய்து வருகிறாராம்.

மம்மூட்டி நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சமந்தா தான் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் அட்லீ - அல்லு அர்ஜுன் இணையப்போவதாக கூறப்படும் படத்திலும் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது.

நடிகை சமந்தா உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதை நாம் தொடர்ந்து அவருடைய பதிவுகளில் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், சமந்தாவின் லேட்டஸ்ட் ஃபிட்னஸ் புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply