• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படம் - வைரலாகும் புகைப்படம்

சினிமா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்தார். ஸ்டார் திரைப்படம் கடந்த மாதம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படம் இதுவரை 25 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்பொழுது வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply