• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தின்  இயக்குனர்

சினிமா

பிரபல சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன் தொழிலதிபராக மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இவர் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் பதிந்தார்.

அதன் பின்னர் இவர் 2022-ல் வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். ஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை . மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சமீபத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த கருடன் திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

இதற்குமுன் துரை செந்தில்குமார் கொடி, காக்கி சட்டை போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படத்தின் இயக்குனரான துரை செந்தில்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். தாடி, மீசை மற்றும் கையில் Gun உடன் காணப்படுகிறார். சிவகார்த்திகேயனுக்கு காக்கி சட்டை எப்படி ஒரு மாறுப்பட்ட ஆக்ஷன் ஹீரோ திரைப்படமாக அமைந்ததோ, சூரிக்கு கருடன் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ. லெஜண்ட் சரவணனுக்கு இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply