• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் கல்விசாரா ஊழியர்கள் சுகயீன விடுமுறை

இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து பணியிலிருந்து விடுபடுவார்கள் என கல்வி சாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி கண்டி, வடமத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் இன்று அதே தொழில் நடவடிக்கை இடம்பெறவுள்ளது

கல்வி மற்றும் கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் வகையில் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கம் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறையின் பின்னர் இன்று முதல் அரச பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply